Translate this blog to any language

சனி, 28 ஜூலை, 2012

ஸ்ருதிக்கு பிறகு (LKG) சுவிதா, பள்ளிப் பேருந்து மேலேறி...xxx! திருந்தாத நாடு!

சேலையூரில் சுருதி (6) மீது பேருந்து ஏறிய குருதி காய்வதற்கு முன்பே இதோ இன்னொரு அதே போன்ற சம்பவம்: இது ஆம்பூர் சுஜிதா (3)

Sujitha LKG - Ambur
Embesso MHS School
Bus-Wheel death
27th July 2012

ஊரும் பேரும்தான் மாறுகிறதே ஒழிய நமது மக்களின் அசட்டை, அலட்சிய மனோபாவம், திமிர்த்தனம் இதெல்லாம் ஒரு போதும் மாறுவதே இல்லை!

நமது நீதியரசர்கள், உங்கள் மீதுதான் நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம் -நீங்கள்தான் இதற்கு சரியான வழிகாட்டுதலும் கடுமையான தண்டனைகளும் உடனுக்குடன் தரவேண்டும்! 


-Yozenbalki
_________

பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி., மாணவி சுஜிதா பலி: 
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012,23:43 IST


வேலூர்:வேலூம் மாவட்டம், ஆம்பூர் அருகே பள்ளி பஸ் மோதியதில், அதே பள்ளியின் எல்.கே.ஜி., மாணவி சிறுமி சுஜிதா  இறந்தார்.

ஆம்பூர் அடுத்த உம்மராபாத் அருகே, ஈச்சம்பட்டு மீனாட்சி காலனியைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளி. இவர் மகள்கள் ஸ்விதா,10, சுஜிதா, 3, உறவினர் மகன் அசோக், 12, ஆகியோர் மாரப்பட்டு எம்பேசோ (EMBESSO) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். 


சுஜிதா, எல்.கே.ஜி., படிக்கிறார். பள்ளியின் சார்பில், 20க்கும் மேற்பட்ட எய்ச்சர் மினி பஸ்கள் உள்ளன. நேற்று வாணியம்பாடியைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன், 35, பள்ளி பஸ்சை ஓட்டி வந்தார். மாலை, 5 மணிக்கு மாணவ, மாணவியரை பள்ளியில் இருந்து ஏற்றிக் கொண்டு, ஒவ்வொரு கிராமமாகப் போய் இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தனர். மாலை, 5. 15 மணிக்கு, ஸ்விதா, சுஜிதா வை, அவர்கள் வீட்டுக்கு அருகில் அருகன் துருகம் என்ற இடத்தில் உள்ள முருகன் கோயில் அருகே, பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இறங்கிய உடன் வீட்டுக்கு போகும் ஆவலில், ஸ்விதா, சுஜிதா ஆகியோர் பஸ்சுக்கு முன் பக்கமாக ஓடி, எதிர் புறமும் இருந்த சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது டிரைவர் வேகமாக, பஸ்சை எடுக்க, பஸ்சின் முன் பக்க டயரில் சுஜிதா சிக்கிக் கொண்டார். இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். சுஜிதாவின் உடலில் முன்புற சக்கரம் ஏறி இறங்கியது. சுஜிதா உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அப்பகுதியினர், பஸ் சக்கரத்தில் சிக்கிய சுஜிதாவை மீட்கப் போராடினர். இதை பார்த்த டிரைவர் கிருஷ்ணன் தப்ப முயன்ற போது, பொது மக்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

பின் மாணவி சாவுக்கு காரணமான பஸ்சை கொளுத்த அப்பகுதியினர் மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உம்மராபாத் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.பின் பஸ் டிரைவர் கிருஷ்ணனை கைது செய்தனர். பள்ளி தாளாளர் சண்முகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி பஸ் டிரைவர் கிருஷ்ணன், மண்பாடி லாரி ஓட்டிக் கொண்டு இருந்தார் என்றும், அவரை பகுதி நேரமாக பஸ்சை ஓட்டச் சொன்னதால் விபத்து நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுஉள்ளனர்.

நன்றி தினமலர்: http://goo.gl/sgp9j

வெள்ளி, 27 ஜூலை, 2012

Hole in the School Bus (or) Hole in Whole Humanity? ஸ்ருதியின் அகால மறைவு - நம் படிப்பினை என்ன?

Chennai, Jul 25: In a freak accident, a six-year-old girl Shruthi (ஸ்ருதி) student was run over by her (Zion Mat HC ) own school bus, after she slipped and fell through a just covered gaping hole beneath her bus-seat at Mudichur near West Tambaram on the city outskirts, this evening.

Shruthi (6yrs) died in Zion School Bus-hole accident:
            on 25th July 2012- Chennai Tambaram
Then-Shruthi with her parent and prizes  
The girl, Shruti, a second standard student of Zion Matriculation School at Indiranagar in Selayur in East Tambaram, was returning home in the school bus when the tragedy occurred. As the news spread, enraged locals thrashed the bus driver and set the vehicle on fire.

The bus was gutted. Shruti was a resident of Bharadwajnagar near Tambaram and was the second daughter of SethuMadhavan, an auto driver whose wife Priya is a house wife. Their son Pranav, elder to Shruti, was studying fifth standard in a Zion school. She used to participate in many school competition.
Then-Shruthi in Zion school competition  
Shruti was seated in the sixth row behind the driver's seat.
There was a gaping hole below her seat which was just covered with a piece of plywood not-nailed.
Shruthi (6yrs) fell down through this Zion School Bus-hole and died 
When the bus reached Mudichur, she suddenly slipped and fell through the hole and was run over by the rear wheels of the same bus, even as her fellow school students watched in horror. She was crushed to death on the spot and the body was taken to Chromepet Government Hospital for post mortem. Enraged locals,
Enraged locals set fire (Zion Mat HC school bus-Shruthi death) 
who witnessed the incident, thrashed the bus driver and also damaged the windscreens of the bus, before setting it on fire. The driver, however, managed to flee. Tension prevailed in the area following the incident and senior police officials rushed to the spot. Through traffic on the Tambaram-Mudichur road was affected for nearly two hours following the mishap.
-Agencies
****************************************************************

சிறுமி சாவு: பள்ளியை மூட அரசு நோட்டீஸ்..? 
பள்ளித் தாளாளர் உள்பட 4 பேர் கைது
http://goo.gl/Pnh7S
Zion School Corresp. Dr. என். விஜயன், பஸ் டிரைவர் பி. சீமான், யோகேஸ்வரன், கிளீனர் சண்முகம் Arrested
(Shruti 2nd Std girl death 25.7.2012 -via gaping hole in school bus) 
சென்னை, ஜூலை 26: பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி ஸ்ருதி (7) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சென்னை சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை ஏன் மூடக் கூடாது என்று கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேலையூரில் செயல்படும் இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த ஸ்ருதி, பள்ளி பஸ்ஸில் வீடு திரும்பும்போது இருக்கைக்கு கீழிருந்த ஓட்டையில் தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாள்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
                                       
                              ஒரு புதிய செய்தி: http://goo.gl/H6Fnr

Large number of residents accompanied the family to take the body of Shruthi from hospital to her home in Mudichur.  — DC
Hundreds pay homage to Shruthi - Chennai 26.7.2012
இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து, ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பழுதுள்ள பஸ்ஸை குத்தகையின் அடிப்படையின் பள்ளி வாகனமாக இயக்கியதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்த ஸ்ருதியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றம் சம்மன்: இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

The Madras High Court today suo motu took cognisance of yesterday's bus mishap in which a second standard girl student fell through a gaping hole in the school bus in which she was travelling and was run over by the rear wheels and directed the Transport Department officials to appear before it today 27th July 2012.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

""பள்ளி பஸ்ஸினுள் இருந்த ஓட்டை வழியே சிறுமி ஸ்ருதி கீழே விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி எல்லா நாளிதழ்களிலும் வந்துள்ளது. மண்டலப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் 15 நாள்களுக்கு முன்பு தகுதிச் சான்றிதழ் (எஃப்.சி.) வழங்கப்பட்ட பஸ்ஸில் இந்த சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

பள்ளியின் நிர்வாகிகள், பஸ்ஸை இயக்குவதற்கு தகுதிச் சான்றிதழ் அளித்த மண்டலப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 27.7.2012 காலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்'' என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலதிக செய்திகள் இங்கு காண்க: http://goo.gl/YvscL
தலைமைச் செயலாளர் ஆலோசனை: முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, போக்குவரத்துத் துறை செயலாளர் பிரிஜ் கிஷோர் பிரசாத் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் அளிக்கப்பட வேண்டிய விளக்கங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பள்ளித் தாளாளர் கைது: இதனிடையே, இச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளியின் தாளாளர் என். விஜயன் (60), பஸ் டிரைவர் பி. சீமான் (58), பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன் (30), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட்: விபத்துக்கு காரணமான பள்ளி பஸ்ஸுக்கு தகுதிச் சான்று வழங்கிய தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.) பட்டப்பாசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில், ராஜசேகர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
------------------------------------------------------------
ஒரு மறக்க இயலாத பழைய செய்தி: http://www.kazhuku.com/2012/05/blog-post_30.html

திருந்தவே மாட்டோமா நாம்? இப்படி மெத்தனமாக, அசட்டையாய் இருந்து எத்தனையோ உயிர்களை இந்த நாட்டில் நாம் இழந்து இருக்கிறோம். அப்படியும் கூட நமக்கு நல்ல புத்தி வரவே வராதா?

வெகு சிலர்தான்  இப்படியா - அல்லது இந்த நாடே அப்படியா?

-YozenBalki

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:




ஹிக்ஸ்--போசான் ( God-particle or Higgs-Boson particle) என்பது என்ன?

தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது
அதற்கு முன்னர் நான் வேறு ஒரு விஷயம் பேசுவேன்!
அறிவியலாளர்களுக்கு வெகு காலமாய் ஒரு கேள்வி இருந்து வருகிறது.
பருப் பொருள்களுக்கு எடை எப்படி உண்டாகிறது என்பதே அது!!

ஒரு அங்குலம் கன சதுர வடிவமுள்ள ஒரு இரும்புத் துண்டுக்கும், அதே அளவுள்ள ஒரு தங்கத்துக்கும் அடிப்படையில் எடை மாறுபாடு ஏன் உண்டாகிறது (வெவ்வேறு தளங்களில் இயங்கும் ஈர்ப்பு விசையை (Gravity) அங்கு கணக்கில் கொள்ளாமல்)?

உதாரணமாக இரும்பின் அடர்த்தி சுமார் 7.874 g.cm -3
அதுவே தங்கத்தின் அடர்த்தி 19.30 g.cm -3
இரும்பின் அணு எடை 55.847
தங்கத்தின் அணு எடை 196.9655

அவற்றின் எடைக்குக் காரணம், அவற்றின் அணுவுக்குள் ஒளிந்திருக்கும் எலெக்ட்ரான், ப்ரோடான், நியூட்ரான் (Electron, Proton, Neutron the three fundamental

sub-atomic particles. There are more sub-atomic particles and antiparticles in a single atom) என்று சொன்னாலும் கூட, அந்த மூன்றும் வெறும் அலைகளே அல்லவா? அலைகளுக்கு எப்படி எடை வந்து அவை பொருளாக மாற இயலும்? அதுவும் அந்தப் பொருள்கள் வெற்றிடத்தில் இருந்து...கருந்துளைகளில் இருந்து எப்படி வெளியாக இயலும்?
வெற்றிடம் அல்லது வளி மண்டலம் ( The Space) என்பது சார்பற்றதா அல்லது சார்புற்று தனித் தனியே தாம் சார்ந்த பொருள்களுடன் நகரும் இயல்புடையதா? அப்படியாயின் எண்ணற்ற வளி மண்டலங்கள் உள்ளனவா? அதாவது பூமிக்கு ஒரு வளிமண்டலம்-அதாவது பூமியோடு நகரும் வான வளி. அதே போன்று, சந்திரனுக்கு ஒரு வளி மண்டலம்-சந்திரனோடு நகரும் வான வளி. இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வளி..அது யாருடையது அய்யா?? அதேபோன்று, எனக்கென்று ஒரு வளிமண்டலம், உங்களுக்கென்று ஒன்று...இந்த அணுவுக்கு இந்தவொரு சிறு வளி-அந்த அணுவுக்கு இன்னொன்று.. இவ்வாறாக?

நீரில் வாழும் மீன்களுக்கு நீர் ஒரு கவசம் போல இருக்கிறது. எனினும் அங்கு தனித் தனி நீர் நிலை என்பது கிடையாது-அங்கு நீர் என்பது ஒரு ஒரே தொகுப்பு. ஆனால், இங்கே நமது வளி மண்டலம் அப்படி ஒன்றே ஒன்றாக இல்லை என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். பார்ப்பதற்கு வானம் என்பது ஒரு மாறாத ஒற்றைப் பின்புலம் போலத் தோன்றினாலும்.....